மின்சார காரை பயன்படுத்தும் ரத்தன் டாடா..!! ஆச்சர்யத்தில் போட்டி நிறுவனங்கள்..!! 

இந்திய வாகன சந்தையில்  பெரிய புரட்சியை ஏற்படுத்திய  டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா. அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் எப்போதும் எளிமையை கடைபிடித்து வருகிறார்.

அவருடைய பிறந்தநாளை கூட ஒரு சிறிய கேக்கை கொண்டு முடித்துக் கொள்ளும் அளவுக்கு அவரின் எளிமை உள்ளது. 

ஆனால் அவர் ஆட்டோமொபைல் துறையில் பல புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.  ரத்தன் டாடாவுக்கு மிகவும் பிடித்த கார்களில் ஒன்று  நானோ கார். இதுகுறித்து கூட சமீபத்தில் கூட ஒரு இடத்தில் சொல்லியிருப்பார்.

இந்தியாவில் வசிக்கும் எளிய மக்களின் போக்குவரத்தை கருத்தில் கொண்டு தான் இந்த நானோ காரை உருவாக்கினேன் என  குறிப்பிட்டு இருப்பார்.

அதாவது இந்த  டாடா நானோ காரை பெருங்கனவுடன் இந்திய வாகன சந்தையில் அறிமுகம் செய்தேன் என கூறினார். கடந்த 2008 ல் இந்திய வாகன சந்தையில் டாடா நானோ கார் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் சந்தையில் வரவேற்பு இல்லாத காரணத்தால் அதன்   உற்பத்தி தடைபட்டது.

இந்த நிலையில் மும்பையில் அமைந்துள்ள தாஜ் ஹோட்டலுக்கு வெள்ளை நிற நானோ மின்சார காரில் வந்து இறங்கியுள்ளார் ரத்தன் டாடா. அவரது இந்த செயல் பலரையும் ஈர்த்துள்ளது.

மின்சார சக்தியில் இயங்கும் இந்தக் காரை அவருக்கு எலெக்ட்ரா  என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனம் பரிசாக வழங்கி உள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிறுவனம் டாடா மற்றும் இன்னும் சில நிறுவனங்களுக்கு மின்சார வாகனம் சார்ந்த உற்பத்தியில் உதவி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.