நடுவானத்தில் நடுங்கிய விமானி..!! சாதுர்யமாக செயல்பட்ட பயணி..!!

அமெரிக்காவில் விமானம் நடுவானத்தில் சென்றுகொண்டிருந்தபோது விமானி மயங்கி விழுந்த நிலையில் அதில் பயணித்த பயணி ஒருவர் பாதுகாப்பாக விமானத்தை தரையிறக்கிய சம்பவம் அமெரிக்காவில் பேசு பொருளாக மாறியுள்ளது.

அமெரிக்க நாட்டின் ப்ளோரிடா மாகாணத்தில் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமானி தனக்கு உடல்நிலை சரியில்லை என்று தெரிவித்திருக்கிறார். இதை கேட்ட பயணிகள் அனைவரும் அதிர்ந்து என்ன செய்வது என தெரியாமல் திகைத்து நின்றனர்.

உடனே அதில் டேரன் ஹாரிசன் என்ற பயணி ஓடிவந்து இப்போது என்ன செய்வது என்று விமானியிடம் கேட்க விமானி அதற்குள் மயங்கிய நிலைக்கு சென்றுள்ளார். 

என்ன செய்வது என புரியாமல் உடனடியாக விமானத்தை கட்டுப்படுத்தவில்லை என்றால் விபத்து நேரிட வாய்ப்புள்ளது என  டேரன் ஹாரிசன் உணர்ந்து  விமானியின் இருக்கையில் அமர்ந்து விமானத்தை இயக்க  முற்பட்டார்.

இந்த நிலையில் ஹெட்செட் வேலை செய்யாமல் மேலும் ஒரு அதிர்ச்சியை தந்தது அவர்க்கு தந்துள்ளது. அதன் பிறகு விமானத்தின் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட  டேரன் ஹாரிசன் அவர்களின்  வழிபடி  நான் பாதுகாப்பாக விமானத்தை தரையிறக்க முயற்சித்தேன் என தெரிவித்தார்.

இந்த நிலையில் விமானமும் சரியாக தரை இறங்கியது என்னால் நம்ப முடியவில்லை என கூறியுள்ளார். இந்த ஆபத்தான நிலையில் நான் சிறிது பொது அறிவுடன் செயல்பட்டதால் தான் விமானம் பாதுகாப்பான முறையில் தரை இறங்கியது என  தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *