வாடிகனில் ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து… செம்மொழிக்கு சிறப்பு அங்கீகாரம்!!

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 1712- ம் ஆண்டு பிறந்தவர் நீலகண்டபிள்ளை. இவர் கிறிஸ்துவ மதம் மாறி தனது பெயரை தேவசகாயம் என மாற்றிக்கொண்டார். இதனை எதிர்த்தவர்கள் அவரை கொலை செய்தனர்.

இந்நிலையில் இவரது உடல் நாகர்கோவில் புனித சவேரியார் தேவாலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனிடையே இவருக்கு மறைசாட்சி பட்டத்தை வழங்கும் விதமாக இத்தாலியில் உள்ள வாடிகன் நகரில் இருக்கும் ரோமில் கத்தோலிக்க திருச்சபையில் தேவசகாயத்திற்கு போப் ஆண்டவர் மறைசாட்சி பட்டத்தை வழங்கினார்.

அப்போது இந்நிகழ்ச்சிகளைகாண தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் அங்கு சென்றிருந்தார். தனது டுவிட்டர் பக்கத்தில் துறவி தேவசகாயம் பிள்ளையின் புனிதர் பட்டமளிப்பு கலாச்சார நிகழ்ச்சியில் வாடிகன் தமிழ்நாட்டிற்கு “தமிழ் கீதம்” வழங்கி கௌரவித்தது! என்றும் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் தருணம்! என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

இதனிடையே புனித மறைசாட்சி பட்டம் பெற்ற தேவசகாயம் தமிழ்நாட்டின் முதல் புனிதர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக அவருக்கு அடுத்த மாதம் (ஜூன்) 5ம் தேதி மறைசாட்சி தேவசகாயம் கொல்லப்பட்ட இடமான ஆரல்வாய்மொழி காற்றாடி மலையில் தமிழகம் சார்பாக விழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *