ட்விட்டரை உபயோகிக்க தொடரும் தடை..!! கவலையில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி..!!
அமெரிக்காவில் கடந்த வருடம் ஜனவரி மாதம் 6 ஆம் தேதி அன்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் பயங்கர வன்முறை நடந்தது. இந்த வன்முறை காரணமாக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ட்விட்டர் கணக்கை முடக்கியது ட்விட்டர் நிறுவனம். ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தவறான தகவல்களை பரப்புவதாக அவரது கணக்கை முடக்கி உள்ளோம் என ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இவரை தவிர 70 ஆயிரத்திற்கும் அதிகமான ட்விட்டர் கணக்குகளை அந்நிறுவனம் தடை செய்து உள்ளது.இந்த 70 ஆயிரம் ட்விட்டர் கணக்குகளும் மக்களை வன்முறைக்கு தூண்டும் விதத்தில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டது என்பதை இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. டொனால்ட் ட்ரம்ப் இனி எப்போதும் ட்விட்டரை உபயோகிக்க அனுமதி கிடைக்காது என்று நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான நெட் செகல் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் டிரம்ப் டிவிட்டர் கணக்கிற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்திருக்கும் நிலையில் அந்த வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த நிலையில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இனி ட்விட்டரை உபயோகிக்க முடியாத அளவிற்கு தடை உருவாக்கி உள்ளது.
அமெரிக்க நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பால் டொனால்ட் ட்ரம்ப் ட்விட்டர் கணக்கு மீண்டும் முடக்கப்பட்டது. மனு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் டொனால்ட் ட்ரம்ப் பழையபடி அவர் உருவாக்கிய செயல்பாட்டை பயன்படுத்தப்போவதாக தெரிவித்தார்.