விவாகரத்து வேண்டாம்..!!  முடிவை மாற்றிக்கொண்ட பில்கேட்ஸ்..

தனது முன்னால் மனைவி மெலிண்டாவை மீண்டும் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக பில்கேட்ஸ்  தெரிவித்துள்ளார். உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் பில்கேட்ஸ் அவரது மனைவி மெலிண்டாவை கடந்த சில மாதத்திற்கு முன்பு விவாகரத்து செய்தார். 

30 ஆண்டு கால மண வாழ்வில் விரிசல் ஏற்பட்டு நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். அவர்களுக்கு ஜென்னர், ரோரி மற்றும் போப் ஆகிய 3 பிள்ளைகள் உள்ளனர்.  விவாகரத்து ஆனபின் இதுகுறித்து அவர் கூறுகையில்  கடந்த இரண்டாண்டுகள் மிகவும் முக்கியமான காலகட்டமாகும். இதற்கு காரணம் கொரோனா பெருந்தொற்று. எனக்கு இது வித்தியாசமான காலமாக அமைத்தது. சிலவற்றை உணர்த்திய காலமாக இது உள்ளது. 

நான் மாற வேண்டிய நிலையில் வந்து விட்டது என கூறினார்.   இந்நிலையில் லண்டன் சண்டே டைம்ஸ் பத்திரிகை பில்கேட்ஸ் அளித்துள்ள பேட்டியில் மெலிண்டாவை மீண்டும் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறியுள்ளார். மேலும் அவர் பேசுகையில் நாங்கள் ஒன்றாக அறக்கட்டளை உருவாக்கினோம். முன்னாள் மனைவியுடன் இன்னும் அறக்கட்டளையில் பணியாற்றுவதை அதிர்ஷ்டமாக உணர்கிறேன். 

எங்கள் அறக்கட்டளையின் வருடாந்திர ஊழியர் கூட்டம் ஜூன் மாதத்தில் நடைபெறுகிறது. மெலிண்டாவும் நானும் ஒன்றாக நடத்தும் வருடாந்திர கூட்டமும் இதுவாகும். மெலிண்டாவுடன் இன்னும் நட்புடன் இருப்பதாக நம்புகிறேன். அவருடன் எனக்கு மிக முக்கியமான, நெருக்கமான அதேசமயம் சிக்கலான உறவு இருந்தது. இதை முடிவுக்கு கொண்டு வர நான் விரும்பவில்லை என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *