கம்மி எண்ணும் கிரிராஜன்… 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது காலை 7 மணி முதலே மக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாபை கழட்டிவிட்டு வாக்களிக்கும்படி பாஜக முகவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலூரில் அல் அமீன் உருது தமிழ் உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் ஏராளமான இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்து வந்து, வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் அங்கிருந்த பாஜக முகவரான ஹரி ராஜன் என்பவர், அனைத்து இஸ்லாமிய பெண்கள் முகம் தெரியும் படி ஹிஜாப்பை கழட்டிவிட்டு, வாக்களிக்க செல்ல வேண்டும் என பிரச்சனையில் ஈடுபட்டார். வாக்குச்சாவடி மையத்தில் இருந்த தேர்தல் அலுவலர்கள் பாஜக முகவரிடம் ’நீங்கள் முகத்தைப் பார்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை’ என்றனர். அதற்கு பாஜக முகவர், ‘‘நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன், அராஜகம் நடக்கிறது, ஏற்றுக்கொள்ள முடியாது. முகத்தை காட்டாமல் அனுமதிப்பது, கள்ளஒட்டு போட அனுமதிப்பதற்கு சமம், அவர் கள்ள ஓட்டுப்போட வந்தாரா?’’ என்று கோஷமிட்டார்.

அங்கிருந்த தேர்தல் அதிகாரிகள் வாக்காளர் பட்டியலை நாங்கள் பரிசோதித்தால் மட்டும் போதும், ஹிஜாபை கழட்ட வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவித்தனர். ஆனால் இதனை ஏற்றுக்கொள்ளாத கிரிராஜன் அதிகாரிகள் மற்றும் பிற கட்சி முகவர்களுடன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து போலீசார் அவரை வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றினர்.

பாஜக முகவர் கிரிராஜனை மேலூர் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீஸார் அங்கு அவரை விசாரணை செய்தனர். தற்போது வாக்குச்சாவடி செயல் அலுவலர் நேதாஜி அளித்த புகாரின் கீழ் பாஜக முகவர் கிரிராஜன் மீது காவல்துறை 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. மதத்தின் உணர்வை புண்படுத்துதல் , மற்றொரு மதத்தைச் சேர்ந்தவரை இழிவுபடுத்தும் படி பேசுதல் , அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிந்த போலீஸார், அடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published.

எய்ம்ஸ் விவகாரத்தில் ஒன்றிய அரசு ‘ஒன் சைட் கேம்’ விளையாடுகிறது – பிடிஆர் சாடல்

கட்சியை பொறுத்தவரை நான் அடிமட்ட தொண்டன் மட்டுமே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்து…

அக்.29 வரை கனமழை நீடிக்கும்; இன்றைய நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் பரபரப்பு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது….

‘புதுச்சேரி வெளிச்சமாக இருக்கிறது’, மின் துறை தனியார் மயமாக்கலை பற்றி தமிழிசை

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கோயமுத்தூர் வருகை தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் சிறப்பு…