இன்று முதல் இதற்கெல்லாம் அனுமதி… தமிழக அரசின் தளர்வுகள் என்னென்ன தெரியுமா?

தமிழ்நாட்டில் தொடர்ந்து தொற்றுப் பரவலை கட்டுக்குள் வைத்திடவும், குறைத்திடவும் பின்வரும் கட்டுப்பாடுகள் மட்டும் 16-2-2022 முதல் 2-3-2022 வரை நடைமுறைப்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்ட நிலையில், தொற்று கணிசமாக குறைந்து வருவதால் மேலும் சில கூடுதல் தளர்வுகள் இன்று முதல் அமல்படுத்தப்பட உள்ளன.

நர்சரி பள்ளிகள் (LKG, UKG) மற்றும் மழைலையர் விளையாட்டுப் பள்ளிகள் (Play Schools) திறக்க அனுமதியளிக்கப்படுகிறது.

பொருட்காட்சிகள் நடத்த அனுமதி

இன்று முதல் உடற்பயிற்சி கூடங்கள், யோகா பயிற்சி நிலையங்கள் 100 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி

துணிக்கடைகள், நகைக்கடைகள், கேளிக்கை விடுதிகள், வணிக நிறுவனங்கள், மால்களில் 100 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்படலாம்.

அனைத்து உள் அரங்குகளில் கருத்தரங்கு, இசை, நாடக நிகழ்ச்சிகளுக்கு 100 சதவீத பார்வையாளர்கள் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

உள்விளையாட்டு அரங்குகள், பொழுதுபோக்கு பூங்காக்களில் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்ற தடை நீக்கம்.

இன்று முதல் திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதே சமயத்தில் சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கும் தடை நீட்டிப்பு, திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 200 நபர்களுடன் மட்டும் நடத்த அனுமதி,
இறப்பு சார்ந்த நிகழ்வுகள் 100 நபர்களுக்கு மிகாமல் அனுமதி போன்ற கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

ஓடும் ரயிலில் அமைச்சருக்கு திடீர் உடல் நலக்குறைவு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு ஓடும் ரயிலில் திடீர் உடல் நலக்குறைவு. சிதம்பரம்…

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளரை தென்னை மட்டையால் அடித்தே மட்டையாக்கிய 12 பேர் கைது

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளராக உள்ள…