போச்சா… ஷாக்கில் இருந்து மீளாத மாஜி அமைச்சர்… ஸ்பெஷல் கோர்ட் கொடுத்த அதிரடி உத்தரவு!

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கூட்டாளிகள் 2 பேருக்கு சொந்தமான ரூ.110 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் அதிரடியாக முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி வீடு, அவரது அலுவலகம், உறவினர்கள் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த ஆகஸ்ட் மாதம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. குறிப்பாக கே.சி.பி. இன்ப்ரா மற்றும் ஆலம் கோல்ட் அண்ட் டைமண்ட் வேலுமணியின் தொடர்பில் இருக்கக்கூடிய நிறுவனங்களாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையடிலட அந்த நிறுவனங்களுக்கு சொந்தமான 110 கோடி ரூபாய் நிரந்தர வைப்பு தொகையை ஊழல் சிறப்பு நீதிமன்றம் முடக்கியுள்ளது. குறிப்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் 2017ம் ஆண்டு இந்த நிறுவனங்கள் இந்த பணத்தை முதலீடு செய்திருப்பதாகவும், இந்த பணம் எல்லாம் டெண்டர்களுக்காக முதலீடு செய்து வைத்திருக்கலாம் என்ற அடிப்படையில் இதில் லஞ்ச பணம் முறைகேடாக பயன்படுத்திருக்கலாம் என்ற அடிப்படையில் வாதத்தை முன்வைத்தனர். அந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் 110 கோடி ரூபாய் வைப்புத்தொகையை முடக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக இரண்டு நிறுவனங்களும் பதிலளிக்கவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைமுறை உள்ள நிலையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் கூட்டாளிகளுக்கு சொந்தமான 110 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கப்பட்ட சம்பவம் அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

“அவங்களுக்கு அரசியல், மானம், நேர்மை இதெல்லாம் கிடையாது”… உடன்பிறப்புகளை உஷார்படுத்திய ஸ்டாலின்!

நச்சு சக்திகளுக்கு சிறிதும் இடம் கொடுக்காத வகையில் திமுகவினர் பொறுபுடன் நக்குமாறு முதலமைச்சர்…

#Breaking சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; சித்தி உட்பட 8 பேருக்கு ஆயுள்; 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை!

சென்னை வண்ணாரப்பேட்டையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 8 பேருக்கு ஆயுள்…