இதெல்லாம் போட வேண்டாம்… அதிர்ச்சியில் ஏர் இந்தியா ஏர்ஹோஸ்டஸ்!

ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்தில் பணியாற்றும் பெண்கள் அதிக அளவில் நகைகள் அணிய வேண்டாம் என உழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா தற்போது டாடா சன்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.ஏர் இந்தியா நிறுவனம் கடுமையான கடன் சுமைக்கு தள்ளப்பட முக்கிய காரணம் என்னவென டாடா குழுமம் ஆராய்ந்தது. அதன் கடந்த சில ஆண்டுகளாகவே விமானப் பயணிகளுக்கு சேவை வழங்குவதிலும், சரியான நேரத்தில் புறப்பட்டுச் செல்வதும் தரையிறங்குவதும் பெரும் பிரச்சனையாக இருந்து வருவது தெரியவந்தது.

இதனையடுத்து ஊழியர்களுக்கு பல்வேறு கட்டளைகளை டாடா குழுமம் பிறப்பித்துள்ளது. கேபின் பணியாளர்கள் அதிகமாக நகை அணிந்து வர வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதிகமாக நகை அணிந்து வருவதால், செக்யூரிட்டி பரிசோதனைக்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளப்படும் என்பதால் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதேபோல் பணி நேரத்தில் விமான நிலையங்களில் உள்ள வரி இல்லாத பொருட்கள் விற்பனை கடைகளுக்குச் செல்வதை பணியாளர்கள் தவிர்க்க வேண்டும் என்றும், சுங்கத்துறை மற்றும் பாதுகாப்பு பரிசோதனைகளை முடிந்தால் உடனடியாக விமானத்திற்குள் வந்துவிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் உணவு அருந்துவது, குளிர்பானம் குடிப்பது போன்ற செயல்களை பயணிகள் விமானத்தில் ஏறும் போதும் செய்யக்கூடாது என்றும் இதனை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

chennai high court

டோல்கேட் ஊழியர்கள் வேலை நிறுத்தம்  தொடர்பாக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருச்சி – சென்னை தேசிய நெடுந்சாலையில் திருமாந்துறை, மற்றும் செங்குறிச்சி சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள்…

கிரானைட் தொழிற்சாலையில் பிளேடு அறுந்து விழுந்து டிராக்டர் டிரைவர் பரிதாப பலி

ஒசூர் அருகே கிரானைட் தொழிற்சாலையில் கற்களை வெட்ட பயன்படுத்தும் பிளேடு அறுந்து விழுந்து…