டீல் ஓவர்  – அடுத்த வாரம் 3 ரபேல் போர் விமானங்கள் இந்திய வருகை 

பிரான்ஸ் நாட்டின் ‘டசால்ட்’ என்ற நிறுவனத்தில் 56 ஆயிரம் கோடி ரூபாய்க்கு, 36 ரபேல் போர் விமானங்களை வாங்க 2016-ல் மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது.கடந்த 2020 ஜூலையில் முதற்கட்டமாக 10 விமானங்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டு விமானப்படையில் சேர்க்கப்பட்டன.

2-வது கட்டத்தில் 3 ரபேல் போர் விமானங்கள் வந்தன. அவை மேற்கு வங்காளத்தில் உள்ள அசிமாரா தளத்தில் செயல்படுத்தப்பட்டது. அதன் பிறகு தொடர்ச்சியாக பல கட்டங்களாக போர் விமானங்கள் வந்தன.முன்னதாக 2019 அக்டோபரில் ஜெட் விமானங்கள் பிரான்சில் ஒப்படைக்கப்பட்டன. அங்கு இந்திய விமானப்படை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டன.

இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டில் இருந்து கடைசி கட்டமாக 3 ரபேல் போர் விமானங்கள் அடுத்த வாரம் இந்தியா வருகிறது. இதை விமானப்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதற்கு முந்தைய நிகழ்வுகளை போல இந்த விமானங்கள் பயணத்தின் போது எரிபொருள் நிரப்பப்பட்டு பிரான்சில் இருந்து நேரடியாக வரும்.

ரபேல் போர் விமானங்கள் அதிநவீனத்துடன் பல்வேறு அம்சங்களை கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஆயுதம் தயாரிப்பு நிறுவனமான மீட்டோர் நிறுவனத்தின் சிறப்பு அம்சங்களான வானில் இருந்து இலக்கை குறிவைத்து தாக்குதல். ஏவுகணையை இடைமறித்து தாக்குதல் போன்ற அதிநவீன அம்சங்கள் உள்ளன.

இந்த விமானத்தில் ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 3,700 கி.மீ. தூரத்திற்கு செல்லும் திறன் கொண்டது. அதிகபட்சமாக மணிக்கு 2,223 கி.மீட்டர் வேகத்தில் பறக்கும் வல்லமை பெற்றது. எதிரிகளை அடையாளம் காண்பதற்கான ரேடார் எச்சரிக்கை கருவியும் ரபேல் போர் விமானத்தில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

ஓடும் ரயிலில் அமைச்சருக்கு திடீர் உடல் நலக்குறைவு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு ஓடும் ரயிலில் திடீர் உடல் நலக்குறைவு. சிதம்பரம்…

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளரை தென்னை மட்டையால் அடித்தே மட்டையாக்கிய 12 பேர் கைது

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளராக உள்ள…