எப்படிலா ஓட்டு கேக்குறாங்க பாருங்க – தோசை சுட்டு ஓட்டு கேட்ட அண்ணாமலை

தமிழ்நாட்டில் பிப்-19ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.தேர்தலுக்கான பிரச்சாரங்களையும் அந்தந்த கட்சி பிரதிநிதிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பாஜக, மாநில தலைவர் அண்ணாமலை நேற்று ஒரு கடையில் தோசை சுட்டு வாக்கு சேகரித்தார்.

சென்னை வார்டு எண்:55-ல், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று இரவு வாக்கு சேகரித்தார். அப்போது, சாலை ஓர உணவக கடையில் இருந்த நபர்களிடம் அவர் தொடர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அங்கு, உணவு தயாரிக்கும் மாஸ்டர் ஒருவர் தோசை சுடும் சவாலை விட்டதாகவும், அப்படி தோசையை சரியாக சுட்டால், தன்னுடைய ஓட்டை அவருக்கேசெலுத்துவதாக கூறியுள்ளார்.

அதனால், அந்த சவாலை ஏற்று தான் தோசை சுட்டதாகவும், தான் சுட்ட தோசையை அவர்கள் விரும்பி ஏற்றதாகவும், சாவலை ஏற்றதால் அவர்களின் ஓட்டை செலுத்துவதாக உறுதியளித்துள்ளதாகவும், அந்த கடை ஊழியர் தெரிவித்ததாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில், புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளார்.

ஒவ்வொரு தேர்தலின் போதும், வாக்காளர்களின் இடங்களுக்கே, சென்று அவர்கள் மேற்கொள்ளும் வேலைகளை அவர்களுடன் சேர்ந்து, செய்து அவர்களின் வாக்குகளை பெற அரசியல் கட்சி பிரதிநிதிகள் முயல்வது வழக்கம். அப்படி, அண்ணாமலை முயன்றுள்ள இந்த செயலை நெட்டிசன்கள் பலரும் பாராட்டியும் ரசித்தும் வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் தலைகவசத்திற்கும் பஞ்சாயத்து செய்யும் அதிமுக

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் சிலைக்கு அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட தங்க கவசத்திற்கு ஒபிஎஸ் சார்பில்…

தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்தத்தை திரும்பபெறவேண்டும் முத்தரசன் கண்டனம்

நாட்டின் கட்டமைப்பை ஒழித்து கட்ட முயலும் பாஜகவின் நடவடிக்கைகளை கண்டித்தும், மத நல்லிணக்கத்தை…