இருந்தாலும் நீங்க அப்படி பேசியிருக்க கூடாது…. பிரதமருக்கு கண்டம் தெரிவித்த டி.ஆர்.எஸ் கட்சி 

ராஜ்யசபாவில் ஆந்திரப் பிரதேச மாநிலத்தை  பிரிப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடியின் அறிக்கைக்கு எதிராக டிஆர்எஸ் எம்பிக்கள் வியாழக்கிழமை சிறப்புரிமை தீர்மானம் ஒன்றை முன் வைத்துள்ளனர். நாடாளுமன்றத்தின் கதவுகளை மூடிவிட்டு தெலுங்கானா மாநிலத்தை உருவாக்கியதாக பிரதமர் மாநிலங்களவையில் பேசியிருந்தார். இந்நிலையில் பிரதமர் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டி.ஆர்.எஸ். கட்சி எம்.பி.க்கள் பிரதமருக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

ஆந்திராவை பிரிப்பது குறித்து பிரதமர் மோடி கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சியினர் புதன்கிழமை சித்திப்பேட்டை மாவட்டம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டி ஆர் எஸ் தொண்டர்கள் சித்திப்பேட்டையில் 1000 பைக்களில் மாபெரும் பேரணி நடத்தினர்.

டி ஆர் எஸ் தொண்டர்கள் கருப்பு ரிப்பன் அணிந்து மோடியின் உருவ பொம்மையை எரித்தனர். இதேபோல், மாநிலம் பிரிக்கும் விவகாரத்தில் மோடியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சின்னகோடூர் மண்டல் தலைமை அலுவலகத்தில் கட்சியினர் 500 பைக்குகளுடன் பேரணி நடத்தினர். ராஜ்யசபாவில் பிரதமரின் செவ்வாய் கிழமை அறிக்கையை கண்டித்து சித்திபேட்டை மாவட்டம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published.

மத்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம்தான் ஆர்எஸ்எஸ் – திருமுருகன் காந்தி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டுவரும் சட்டங்களையும், திட்டங்களையும் தடுக்க ஆளுநருக்கு எந்த உரிமையும்…