மீதமுள்ள பொங்கல் தொகுப்பை இவங்களுக்கு கொடுங்க… தமிழக அரசு அதிரடி!

MK Stalin

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பு மீதமிருந்தால் அம்மா உணவகம், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் ஆகியவற்றிற்கு வழங்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. அவ்வாறு வழங்கப்பட்டது போக, கையிருப்பில் உள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பில் உள்ள பொருட்களின் தரத்தை உறுதி செய்தபின், அந்தந்த மாவட்ட ஆட்சியர், சென்னை மாநகர துணை ஆணையரிடம் ஒப்படைத்து தீர்வு செய்யலாம் என கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலர் நசிமுதீன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவற்றை மாவட்ட ஆட்சியர்கள்,துணை ஆணையர் ஆகியோர் விருப்புரிமை அடிப்படையில் பொதுநல அரசு சார், அரசு சாரா அமைப்புகளில் தங்கிபயன்பெற்று வரும் பொருளாதாரத்தில் நலிவுற்ற பயனாளிகள், தொழுநோயாளிகளுக்கான காப்பகங்களில் அனுமதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள், அரசு மனநல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பங்கள், ஊரக குடிசைப் பகுதிகளில் உள்ள நோய்வாய்ப்பட்டுள்ளவர்கள், குறிப்பாக கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் குடும்பங்கள், அம்மா உணவ கம், சமுதாய சமையல் கூடங்கள் மற்றும் இன்னும் பிற பொது பயன்பாட்டுக்காக உபயோகப்படுத்தலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

chennai high court

டோல்கேட் ஊழியர்கள் வேலை நிறுத்தம்  தொடர்பாக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருச்சி – சென்னை தேசிய நெடுந்சாலையில் திருமாந்துறை, மற்றும் செங்குறிச்சி சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள்…

கிரானைட் தொழிற்சாலையில் பிளேடு அறுந்து விழுந்து டிராக்டர் டிரைவர் பரிதாப பலி

ஒசூர் அருகே கிரானைட் தொழிற்சாலையில் கற்களை வெட்ட பயன்படுத்தும் பிளேடு அறுந்து விழுந்து…