எங்கும் பாசிசம் ! எதிலும் பாசிசம்!! மருத்துவத்துறையில் காவியை கலக்கும் பாஜக  

மருத்துவத்துறையில் நீட் என்ற தேர்வை கொண்டு வந்து ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கனவை குழி தோண்டி புதைத்த பாஜக மீண்டும் ஒரு சதி திட்டத்தில் இறங்கியுள்ளது.  மருத்துவ துறையின் தந்தையாக கருதப்படுபவர் ஹிப்போகிரட்டஸ். உலகம் முழுவதும் உள்ள மருத்துவ மாணவர்கள், மருத்துவ படிப்பை தொடங்குவதற்கு முன்பு  அவரது  பெயரில் உறுதிமொழி எடுத்துக் கொள்வர் . இந்நிலையில் கல்வியில் காவியை  கலந்து வருபவர்கள் தற்போது மருத்துவக் கல்வியிலும் காவியைக் கலக்கத் தொடங்கி விட்டனர். 

ஹிப்போகிரட்டஸ் உறுதி மொழிக்குப்  பதிலாக  பண்டைய  ஆயுர்வேத மருத்துவ வல்லுநர்  மகரிஷி சரகர்  பெயரில் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த நடைமுறையை ஏற்கனவே பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் நடைமுறைக்கு வந்து விட்டது. 

யோகா, ஜோதிடம், தாந்திரீக மருத்துவம் என்று இவைகளை அறிவியல் பாடங்களாக பல்கலைக்கழகத்தில் இணைத்து விட்டனர். பண்பாடு , கலாச்சாரம் என்ற பெயரில் தொடர்ந்து தங்களது  திட்டத்தினை நிறைவேற்றும் போக்குபோக்கு  தொடர்ந்து நடக்கிறது. 

மேலை நாட்டு கலாச்சாரம், மற்றும் விழுமியங்களை அந்நியமாக்கம் செய்து தங்களுடையதே சிறந்தது  என்று பரப்புரை செய்து தங்கள் செயலுக்கு ஆதரவு திரட்டுவது அவர்கள் வழமையாக கடைப்பிடித்து வரும் உத்தி தான் இது . இன்றைய உலகில் நவீன  அறிவியல் தொழில்நுட்ப ம் இல்லாமல் வாழ்க்கை கிடையாது. அரசியல் சமூக பொருளாதார நடவடிக்கைகள் கிடையாது. நவீனத்திற்கு ஒரு பங்கும் அளிக்காத தேங்கிப் போன பழமையை வைத்து இருக்கும் இவர்கள் நவீன அறிவியலுக்கு இந்துத்துவ முலாம் பூசிட  கொஞ்சம் கூட தயங்குவதில்லை. 

விநாயகர் – ப்ளாஸ்டிக் சர்ஜரி, கவுரவர்கள்  பிறப்பு சோதனைக் குழாய் குழந்தை, பிரம்மாஸ்திரம் தான் அணுகுண்டு, மாயக் கண்ணாடி யில் பார்ப்பது இன்றைய இணைய நேரடி ஒளிபரப்பு என்று போலி அறிவியல் கதைகளை தொடர்ந்து உற்பத்தி செய்து நம்மிடம் ஒரு சிறப்பான பழங்காலம் இருந்தது அது (இவர்கள் கட்டமைக்கும் ) எதிரிகளால் காணாமல் போனது என்று போலிப் பெருமித உணர்வைத் தூண்டுவது, அதன் வழியாக மக்களை தம் அரசியலுக்குள் இழுத்துக் கொள்வது என்று தொடர்ந்து செய்து வருகின்றனர். இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். கடந்த சில ஆண்டுகளாகவே இந்த காவிகளின் ஆட்டம் அதிகமாகி கொண்டே போகிறது. இவர்களின் ஆட்டத்தை ஒடுக்காமல்விட்டால் இவர்கள் அணைத்து துறைகளிலும் ஊடுருவி, மக்கள் நலன்களை கெடுத்து விடுவார்கள். எனவே மக்கள் அனைவரும் விழிப்போடு  இருந்து பாஜக, ஆர்.எஸ்.எஸ் போன்ற இயக்கங்கள் கொண்டு வரும் திட்டத்தை முழுமையாக எதிர்க்க வேண்டும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் தலைகவசத்திற்கும் பஞ்சாயத்து செய்யும் அதிமுக

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் சிலைக்கு அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட தங்க கவசத்திற்கு ஒபிஎஸ் சார்பில்…

தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்தத்தை திரும்பபெறவேண்டும் முத்தரசன் கண்டனம்

நாட்டின் கட்டமைப்பை ஒழித்து கட்ட முயலும் பாஜகவின் நடவடிக்கைகளை கண்டித்தும், மத நல்லிணக்கத்தை…