இதை மீறினால் 6 மாசம் ஜெயில், ரூ.1000 அபராதம்… தெற்கு ரயில்வே எச்சரிக்கை!

சட்ட விதிகளை மீறி ரயில் தண்டவாளங்களை கடந்து சென்றால் 6 மாதம் சிறை தண்டனை வழங்கப்படும் என தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரயில் தண்டவாளங்களைக் கடந்து செல்வதைத் தடுக்கக் கோரியும், பாதுகாப்பான பய ணத்தை மேற்கொள்ளவும், தெற்கு ரயில்வே புதிய பாதுகாப்பு விழிப்புணர்வு இயக்கத்தைத் தொடங்குகிறது. பயணிகள், பொதுமக்களின் பாதுகாப்புக்கு முன்னு ரிமை அளிக்கிறது. 2019-20-ம் ஆண்டில் சென்னைகோட்டத்தில் ரயில்வே பாதுகாப்புபடையால் சட்டத்துக்கு புறம்பாக ரயில் தண்டவாளங் களைக் கடந்ததால் 2,422 பேர் கைது செய்யப்பட்டு, வழக்கு பதியப் பட்டுள்ளது. அவர்களிடமிருந்து ரூ.11.98 லட்சம் அபராதம் விதிக் கப்பட்டது.

இதே குற்றத்துக்காக 2021-ம் ஆண்டு முதல் ஜனவரி 2022 வரை 1,402 பேர் கைது செய்யப்பட்டு வழக்கு பதியப்பட்டுள்ளது.
ரயில்வே சட்டம், பிரிவு 147-ன் படி மொத்தம் ரூ.5 லட்சம் அபராதம் நீதிமன்றங்களால் விதிக்கப்பட்டது. ரயில் தண்டவாளங்களில் சட்டத் துக்கு புறம்பாக விபத்துகள் ஏற்படுவதைக் கட்டுப்படுத்தும் நோக் கில் சென்னை கோட்டம் பலவித நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

ரயில்வே நிலங்களில் ஆக்கிர மிப்புகளை அகற்றுதல், ஆபத்து ஏற்படக் கூடிய இடங்களில் எல்லை சுவர்களை எழுப்புதல், மக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத் துதல், தேவையான இடங்களில் நடை மேம்பாலங்கள், சுரங்கப் பாதைகள் அமைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஓடும் ரயிலில் ஏறுவது, இறங்குவது, சட்டத்துக்கு புறம்பாக ரயில் தண்டவாளங்களை கடப்பது ஆகியவற்றை மேற்கொண்டால், ரயில்வே சட்டம், பிரிவு 147-ன் படி 6 மாத சிறை தண்டனை அல்லது ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published.

ஓடும் ரயிலில் அமைச்சருக்கு திடீர் உடல் நலக்குறைவு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு ஓடும் ரயிலில் திடீர் உடல் நலக்குறைவு. சிதம்பரம்…

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளரை தென்னை மட்டையால் அடித்தே மட்டையாக்கிய 12 பேர் கைது

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளராக உள்ள…