சோலோவாக இறங்கும் விஜய் – தனித்து போட்டியிடும் விஜய் மக்கள் இயக்கம்

கடந்த ஆண்டு நடைபெற்ற ஊராட்சி ஒன்றிய தேர்தலில், விஜய் மக்கள் இயக்கத்தினர் 169 பேர் போட்டியிட்டு இரண்டு ஊராட்சி தலைவர்கள், 15 ஊராட்சி மன்ற துணை தலைவர்கள் உள்பட 129 பேர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற நபர்களை விஜய் நேரில் அழைத்து வாழ்த்தியதோடு மக்கள் பணியை சிறப்பாக செய்யும்படி அறிவுரையும் வழங்கினார்.

இந்நிலையில் அடுத்து மாதம்  தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிட முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியானது. பேரூராட்சிகளில் அதிக வேட்பாளர்களை நிறுத்தவும் நகராட்சி மற்றும் மாநகராட்சி வார்டுகளில் வெற்றி வாய்ப்புள்ள இடங்களில் மட்டும் போட்டியிட முடிவு செய்திருப்பதாக கூறப்பட்டது. மேலும் விஜய்யின் படங்கள் மற்றும் மக்கள் இயக்க கோடியை தேர்தலுக்கு பயன்படுத்தி கொள்ளவும் அனுமதி தரப்பட்டுள்ளது.தேர்தல் வேட்பாளர்களை மாவட்ட பொறுப்பாளர்கள் தேர்தெடுப்பர்கள் என்று செய்தி வெளியானது.

இந்நிலையில் வரும் 19-ம் தேதி நடைபெறும் நகராட்சி தேர்தலில், விஜய் மக்கள் இயக்கம் எந்த கட்சியுடன் கூட்டணி, ஆதரவுமில்லாமல் தனித்து போட்டியிடுகிறது என்று புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published.

chennai high court

டோல்கேட் ஊழியர்கள் வேலை நிறுத்தம்  தொடர்பாக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருச்சி – சென்னை தேசிய நெடுந்சாலையில் திருமாந்துறை, மற்றும் செங்குறிச்சி சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள்…

கிரானைட் தொழிற்சாலையில் பிளேடு அறுந்து விழுந்து டிராக்டர் டிரைவர் பரிதாப பலி

ஒசூர் அருகே கிரானைட் தொழிற்சாலையில் கற்களை வெட்ட பயன்படுத்தும் பிளேடு அறுந்து விழுந்து…