‘அல்லாஹூ அக்பர்’ ஒற்றை முழக்கத்தில் இந்தியாவை விழிக்க வைத்த மாணவி… யார் தெரியுமா?

இன்று காலை முதலே இணையத்தில் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வந்த மாணவி ஒருவர், காவி துண்டு அணிந்த மாணவர்களின் ‘ஜெய்ஸ்ரீராம்’ கோஷத்திற்கு எதிராக ‘அல்லாஹூ அக்பர்’ என முழக்கமிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

கர்நாடகாவில் ஹிஜாப், காவி துண்டு போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. கடந்த டிசம்பர் மாதம், கர்நாடக மாநிலம் குண்டபுராவிலுள்ள பியூ அரசுக் கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்துவருவதை எதிர்த்து இந்து, மாணவ மாணவிகள் மத அடையாளத்தை வெளிப்படுத்தும் காவித்துண்டு போன்ற ஆடைகளை அணிந்துவந்து போராட்டம் நடத்தினர். இதனையடுத்து கல்லூரி நிர்வாகம் கல்லூரி நிர்வாகம் முஸ்லிம் மாணவிகள், கல்லூரிக்குள் ஹிஜாப் அணிந்து வரக் கூடாது என்றும், மீறி வந்தால் தனி அறையில் அமரவைக்கப்படுவார்கள் என்றும் கூறியது பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது.

கல்லூரி மாணவர்களிடையே மத உணர்வை தூண்டிவிடும் விதமாக அமைந்த இந்த பிரச்சனை மெல்ல மெல்ல சூடுபிடிக்க ஆரம்பித்த நிலையில், கர்நாடகாவில் உள்ள பள்ளி ஒன்றில் தேசியக்கொடியேற்றும் கம்பத்தில் இந்து மாணவர்கள் காவிக்கொடியை ஏற்றியது பெரும் அதிர்ச்சியை உருவாக்கியது.

இந்நிலையில் இன்று காலை கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வந்த முஸ்கான் என்ற மாணவியைக் கண்டதும், அங்கிருந்த காவி துண்டு அணிந்த மாணவர்கள் ஜெய்ஸ்ரீராம் என முழக்கமிட்டனர். இதற்கு தனி ஒரு ஆளாக பதிலடி கொடுக்கும் விதமாக அந்த மாணவி ‘அல்லாஹூ அக்பர்’ என முழக்கமிட்டுள்ளார்.

பேட்டி ஒன்றிற்கு பதிலளித்துள்ள “நான் கவலைப்படவில்லை.எனது அசைன்மென்ட்டை ஒப்படைக்கவே வந்தேன்.புர்கா அணிந்ததால்என்னை அனுமதிக்கவில்லை.என்னை நோக்கி ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் எழுப்பினர். அதனைத் தொடர்ந்தே நான் அல்லாஹு அக்பர் கூறஆரம்பித்தேன்.எனது இந்து நண்பர்கள் எனக்கு துணையாக இருந்தனர்” என தைரியமாக பதிலளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

மத்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம்தான் ஆர்எஸ்எஸ் – திருமுருகன் காந்தி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டுவரும் சட்டங்களையும், திட்டங்களையும் தடுக்க ஆளுநருக்கு எந்த உரிமையும்…