ஒரு எலுமிச்சை பழத்தின் விலை ரூ.75 ஆயிரம்… எங்கு தெரியுமா?

lemon

ஈரோட்டில் அம்மன் சிலை மீது வைத்து பூஜை செய்யப்பட்ட ஒரு எலுமிச்சை பழம் 75 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் பச்சாபாளையத்தில் அம்மன் சிலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட எலுமிச்சை 75 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போன சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் உள்ள மகா மாரியம்மன் கோயிலில் திருவிழா கடந்த மாதம் 25-ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து ஜனவரி 27-ம் தேதி கம்பம் நடப்பட்டு அக்னி கும்பம் வைக்கப்பட்டது.

இந்நிலையில் , நேற்று இரவு அம்மனுக்கு மறு அபிஷேகம் நடைபெற்ற போது, அம்மன் சிலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட ஒரு எலுமிச்சம் பழம் ஏலம் விடப்பட்டது. அதை அப்பகுதியைச் சேர்ந்த கோகுல் ஆனந்தகுமார் என்பவர் 75 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளார். அம்மன் சிலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட எலுமிச்சையை வீட்டில் வைத்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாகும்.

Leave a Reply

Your email address will not be published.

இந்தோனேசியாவில் பயங்கரம்!! கால்பந்து மைதானத்தில் மோதல்… 127 பேர் பலி!!

இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியின் போது ரசிகர்கள் மைதானத்திற்குள் புகுந்து தாக்கியதால் ஏற்பட்ட வன்முறையில்…

ஓடும் ரயிலில் அமைச்சருக்கு திடீர் உடல் நலக்குறைவு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு ஓடும் ரயிலில் திடீர் உடல் நலக்குறைவு. சிதம்பரம்…

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளரை தென்னை மட்டையால் அடித்தே மட்டையாக்கிய 12 பேர் கைது

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளராக உள்ள…