இவர்களுக்கு நோ சிறப்பு கவனிப்பு… மாநில தேர்தல் ஆணையம் கறார்!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்குப்பதிவு நடக்கும் அன்று வாக்குச்சாவடி மையங்களில் எவை, எவை தவிர்க்கப்பட வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அவற்றில் குறிப்பிடத்தக்கவை பின்வருமாறு;

“வாக்குப்பதிவு அலுவலர்கள் மற்றும் முகவர்கள் வாக்குச்சாவடிக்குள் செல்போனில் பேசுவது கூடாது. புகைப்பிடிப்பதையும், குடிப்போதையில் இருப்பதையும் தவிர்க்க வேண்டும். வாக்குப்பதிற்கு வருகை புரியும் முக்கிய பிரமுர்கள் வருகையின்போது வாக்குப்பதிவு அலுவலர்கள் அவர்களுக்கு சிறப்பு உபசரணைகள் செய்யக்கூடாது.

வாக்குப்பதிவு அறைக்குள் (Voting Compartment) வாக்காளர்களை தவிர வாக்குச்சாவடி முகவர்களோ, வாக்குப்பதிவு அலுவலர்களோ, பிற நபர்களோ செல்லக்கூடாது. பேலட் யூனிட்டில் ஏதேனும் குறைபாடுகள் ஏற்பட்டிருக்கும் சமயத்தில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் முகவர்களின் முன்னிலையில் மட்டுமே அதை சரிசெய்ய வேண்டும்.

வாக்குப்பதிவு அறைக்குள் (Voting Compartment) பத்திரிக்கை நிருபர்களையோ, வேறு நபர்களையோ புகைப்படம் எடுக்க அனுமதிக்கூடாது. முகவர்கள் வாக்குச் சாவடியை விட்டு வெளியே செல்லும்போதோ, திரும்ப வரும்போதோ வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட எந்த ஓர் ஆவணத்தையும் கொண்டு செல்லவோ, கொண்டு வரவோ அனுமதிக்கக்கூடாது.

முகவர்களை தங்களுடைய வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட ஆவணங்களை வாக்குச்சாவடி தலைமை அலுவலரிடம் ஒப்படைத்துவிட்டு வெளியில் செல்லவும், மீண்டும் உள்ளே வரவும் அனுமதிக்கலாம். வாக்குச்சாவடிக்குள் முகவர்கள் ஒருவருக்கொருவர் அரசியல் விமர்சனங்கள், இதர விமர்சனங்கள் பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்” என உள்ளிட்டவை கட்டுப்பாடுகளில் இடம்பெற்றுள்ளன.

Leave a Reply

Your email address will not be published.

எய்ம்ஸ் விவகாரத்தில் ஒன்றிய அரசு ‘ஒன் சைட் கேம்’ விளையாடுகிறது – பிடிஆர் சாடல்

கட்சியை பொறுத்தவரை நான் அடிமட்ட தொண்டன் மட்டுமே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்து…

அக்.29 வரை கனமழை நீடிக்கும்; இன்றைய நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் பரபரப்பு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது….

‘புதுச்சேரி வெளிச்சமாக இருக்கிறது’, மின் துறை தனியார் மயமாக்கலை பற்றி தமிழிசை

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கோயமுத்தூர் வருகை தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் சிறப்பு…