வாயில தோசை  கையில காசு ! 10 அடி தோசை சாப்பிட்டால் ரூ.71,000

நாம் இதுவரை எத்தனையோ போட்டிகளை பார்த்திருப்போம் பார்த்திருப்போம்.  வெண்ணிலா கபடி குழு படத்தில் நடிகர் சூரி 50 பரோட்டா சாப்பிட்டால், சாப்பிட்ட பரோட்டாவுக்கு பணம் தர தேவையில்லை என்பது போல் ஒரு சீன் இருக்கும். ஆனால் தலைநகர்  டெல்லி  10 அடி தோசையை 40 நிமிடங்களில் சாப்பிட்டால் ரூ.71,000 பரிசு என ஒரு உணவகம் அறிவித்துள்ளது.இந்த டெல்லி உணவகம் 10 அடி நீள தோசையை சாப்பிட ரூ.71,000 வழங்குகிறது. டெல்லி உத்தம் நகரில் உள்ள சுவாமி சக்தி சாகர் உணவகத்தில் தான் இந்த போட்டி நடைபெறுகிறது.

மேலும் தோசையை சுடுவதற்காகவே பிரத்யோகமாக 10 அடி நீள அடுப்பை வாங்கியுள்ளார் உணவாக உரிமையாளர். இப்போட்டியில் கலந்து கொள்ள போட்டியாளர் முன்பணமாக ரூ.1500 கட்ட வேண்டும். இதுவரை சுமார் 25 பேர் போட்டியில் பங்கேற்ற நிலையில் யாரும் வெற்றி பெறவில்லை என்று அந்த உணவக உரிமையாளர் கூறியுள்ளார்.

இதுகுறித்து ஹோட்டல் உரிமையாளர் கூறியது, “இதற்கு முன்பு நாங்கள்  சிறிய தோசையைச் சுட்டு கொண்டிருந்தோம், ஆனால் வாடிக்கையாளர்களுக்கு அது சவாலானதாக இல்லை. அதனால் தான்  பெரிய தோசையைச் சுட  முடிவு செய்தோம்.” என்று கூறினார். 

Leave a Reply

Your email address will not be published.

ஓடும் ரயிலில் அமைச்சருக்கு திடீர் உடல் நலக்குறைவு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு ஓடும் ரயிலில் திடீர் உடல் நலக்குறைவு. சிதம்பரம்…

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளரை தென்னை மட்டையால் அடித்தே மட்டையாக்கிய 12 பேர் கைது

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளராக உள்ள…