டென்னிஸில் வரலாறு படைத்த ரஃபேல் நடால்..!

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷ்யாவின் மெத்வதேவை வீழ்த்தி பட்டம் வென்றார் ஸ்பெயினின் ரஃபேல் நடால். இதன்மூலம் ஆடவர் ஒற்றையர் பிரிவில் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதுவரை அவர் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 21 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.

35 வயதான ரஃபேல் நடால் இந்தப் புதிய வரலாற்று சாதனையை நிகழ்த்தி அசத்தி இருக்கிறார். இதற்கு முன்னதாக, பிரெஞ்ச் ஓபனில் 13 பட்டங்களையும், அமெரிக்க ஓபனில் 4 பட்டங்களையும், ஆஸ்திரேலிய ஓபனில் 2 பட்டங்களையும் மற்றும் விம்பிள்டனில் 2 பட்டங்களையும் வென்றுள்ளார். இதன்மூலம் ஆடவர் ஒற்றையர் பிரிவில் முதன் முதலாக 21 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவர் என்ற பெருமை அவரையே சேரும்.

5 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டியில் 2-6, 6-7, 6-4, 6-4, 7-5 என்ற செட் கணக்கில் தன்னை எதிர்த்து விளையாடிய ரஷ்ய வீரரை வீழ்த்தினார். முதல் 2 செட்களில் தோல்வியடைந்த ரஃபேல் நடால், அடுத்தடுத்த 3 செட்களை வென்று சாம்பியன் பட்டத்தை வென்றார். அதன் மூலம் வரலாற்று சாதனையைப் படைத்தார்.

ஆஸ்திரேலிய ஓபனில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்த அவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.

chennai high court

டோல்கேட் ஊழியர்கள் வேலை நிறுத்தம்  தொடர்பாக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருச்சி – சென்னை தேசிய நெடுந்சாலையில் திருமாந்துறை, மற்றும் செங்குறிச்சி சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள்…

கிரானைட் தொழிற்சாலையில் பிளேடு அறுந்து விழுந்து டிராக்டர் டிரைவர் பரிதாப பலி

ஒசூர் அருகே கிரானைட் தொழிற்சாலையில் கற்களை வெட்ட பயன்படுத்தும் பிளேடு அறுந்து விழுந்து…