“ஒரே நாடு, ஒரே பதிவு முறை” – பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு!

நாட்டின் எந்த பகுதியில் இருந்தாலும் பத்திரப்பதிவுகளை மேற்கொள்ள ஒரே நாடு ஒரே பதிவு முறைய கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

  • பணம் செலுத்துவதில் ஏற்படும் தாமதத்தைக் குறைக்க அனைத்து அமைச்சகங்களும் பயன்படுத்தும் வகையில் ஆன்லைன் பணம் செலுத்தும் திட்டம் தொடங்கப்படும்
  • மின் வாகனங்களில் சார்ஜ் போடுவதற்கு பதில் பேட்டரியை மாற்றிக் கொள்ளும் வகையில் திட்டங்கள் மேற்கொள்ளப்படும். இதற்காக பேட்டரியை மாற்றிக் கொள்ளும் பிரத்யேக மையங்கள் நாடெங்கிலும் துவங்கப்படும்.
  • மின்சார வாகனங்களுக்காக ஊரகப்பகுதிகளில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும்நில ஆவணங்களை மின்னணு முறையில் ஆவணப்படுத்த `ஒரே நாடு; ஒரே பதிவு முறை’ என்கிற திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இதன் மூலம் நாட்டின் எந்த இடத்தில் இருந்தும் பத்திரங்களைப் பதிவு செய்ய முடியும்.
  • 5 ஜி மொபைல் சேவைகள் வரும் நிதியாண்டிலேயே கொண்டு வரப்படும். தொலைதொடர்பு துறையில் 5ஜி அடிப்படையில் சேவை வழங்க இந்த ஆண்டு அலைகற்றைகள் ஏலம் விடப்படும்.
  • நகர திட்டமிடலுக்கு உயர்மட்டக்குழு அமைக்கப்படும்
  • ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்க அனுமதி
  • கிராபிக்ஸ், அனிமேஷன் துறைகளை மேம்படுத்த, இந்த துறைகளின் செயல்பாடுகளை இன்னும் சிறப்பானதாக மாற்ற சிறப்பு பேனல்கள் அமைக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published.

தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்தத்தை திரும்பபெறவேண்டும் முத்தரசன் கண்டனம்

நாட்டின் கட்டமைப்பை ஒழித்து கட்ட முயலும் பாஜகவின் நடவடிக்கைகளை கண்டித்தும், மத நல்லிணக்கத்தை…

மூன்று நாட்களாக கட்டணமில்லாமல் கடந்து செல்லும் வாகனங்கள், டோல்கேட் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் 

பெரம்பலூர் திருமாந்துறை சுங்கச்சாவடியில் மூன்று நாட்களாக அனைத்து ஊழியர்களும் பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு…