இப்படி எல்லாம வேல தேடுவாங்க – பார்க்கிங் செய்யப்பட்ட கார்களில்  RESUME ஒட்டிய இளைஞர்

தற்போது உள்ள அவசர உலகத்தில் ஒரு வேலையை தேடுவது என்பது கடலில் தொலைத்த குண்டு ஊசியை கண்டுபிடிப்பது போல, அவ்ளோ சீக்கிரத்தில் கிடைக்காது. வேலையை தேடுவதைக் காட்டிலும், வேலைக்காக நேர்காணலில் அமர்ந்து நிறுவன மேலாளர் கேட்ட கேள்விக்கு சரியான பதிலை சொல்வதற்குள் படித்தது அனைத்தும் மறந்தே  விடும். மேலும் ஒரு நிறுவனத்தில் வேலை பெற விண்ணப்பங்களை அனுப்புவதும், விண்ணப்பப் படிவங்களை நிரப்புவதும் நிலையான வழிகள்.இப்படி இருக்கும் நிலையில், இங்கிலாந்தை சேர்ந்த நபர் ஒருவர் வித்தியாசமான முறையில் வேலையை தேடியுள்ளார்.

இங்கிலாந்தில் உள்ள பிரபல நிறுவனத்தில், எப்படியாவது வேலை பெற வேண்டும் என்பதற்காக ஒரு இளைஞர் அந்நிறுவனத்தின் கார் பார்க்கிங்-ல் இருந்த அனைத்து கார்களிலும் அவரது resume -ஐ  வைத்துள்ளார். அந்த இளைஞனின் வித்தியாசமான அணுகுமுறையை கண்டு ஆச்சரியமடைந்த, வேலையை தந்துள்ளது அந்நிறுவனம்.மேலும் இதுபோன்ற வித்யாசமாக யோசிப்பவர்கள் தான் எங்க நிறுவனத்திற்கு தேவை என்று அந்நிறுவன மேலாளர் தெரிவித்துள்ளார். 

இச்செய்தி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் வேலையில்லா இளைஞர்களுக்கு,எப்படி வேலை தேட வேண்டும் என்று  ஒரு புதிய வழியை  வழங்கியுள்ளார் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.மேலும் இதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், நமக்கு விருப்பமான நிறுவனங்களில் வேலை பெற வேண்டுமென்றால் அதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் கஷ்டப்படலாம் என்பதே.   

Leave a Reply

Your email address will not be published.

“அவங்களுக்கு அரசியல், மானம், நேர்மை இதெல்லாம் கிடையாது”… உடன்பிறப்புகளை உஷார்படுத்திய ஸ்டாலின்!

நச்சு சக்திகளுக்கு சிறிதும் இடம் கொடுக்காத வகையில் திமுகவினர் பொறுபுடன் நக்குமாறு முதலமைச்சர்…

#Breaking சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; சித்தி உட்பட 8 பேருக்கு ஆயுள்; 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை!

சென்னை வண்ணாரப்பேட்டையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 8 பேருக்கு ஆயுள்…