மக்களே தயாரா?… நாளை முதல் அனுமதி!

நாளை முதல் கடற்கரைக்குச் செல்லலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றின் கோரதாண்டவத்தை அடுத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளை தொடர்ந்து கொரோனா தொற்று கட்டுக்குள் வந்ததை அடுத்து, இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு நேர ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் நாளை முதல் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்கவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இன்று சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, “சென்னையில் மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை பகுதிகளில் பொதுமக்களை அனுமதிப்பது தொடர்பாக மாநகர காவல் ஆணையருடன் ஆலோசனை நடத்தினேன். அப்போது பொதுமக்களை அனுமதிக்கலாம் எனவும் அதே நேரத்தில் கொரோனா பரவல் தடுப்பு வழிமுறைகளான சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், முகக் கவசம் அணிதல் போன்றவற்றை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் எனவும் விதிகளை மீறினால் அபராதம் விதிக்கவும் முடிவு செய்திருக்கிறோம்’’ எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

மத்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம்தான் ஆர்எஸ்எஸ் – திருமுருகன் காந்தி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டுவரும் சட்டங்களையும், திட்டங்களையும் தடுக்க ஆளுநருக்கு எந்த உரிமையும்…