ஜோதிமணி மீது செம்ம கடுப்பில் செந்தில் பாலாஜி… என்ன சொன்னார் தெரியுமா?

கரூரில் தொகுதி பங்கீடு குறித்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி ஆவேசமாக வெளியேறியது குறித்து கருத்து கூற விரும்பவில்லை என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கரூர் திமுக மாவட்ட அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் இன்று தி.மு.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டணிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது. தி.மு.க கரூர் மாவட்டப் பொறுப்பாளரும், மின்சாரத்துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் போது கரூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சின்னச்சாமி ஒரு பட்டியலை கொடுத்துள்ளார். அத்தோடு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியும் தனது ஆதரவாளர்கள் 9 பேருக்கு சீட் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு செந்தில் பாலாஜி மறுப்பு தெரிவிக்கவே, ஜோதிமணி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த திமுக உடன்பிறப்புகள் ஜோதிமணியை வெளியே போகச் சொல்லியிருக்கிறார்கள். இதனால் ஆத்திரமடைந்த ஜோதிமணி ‘நான் என்ன உங்க வீட்டுக்கு விருந்தா வந்திருக்கேன்’ ‘எனக்கும் ஒருமையில் திருப்பி பேசத் தெரியும்’ என சகட்டுமேனிக்கு சத்தம் போட்ட படியே வெளியே வந்தார். இந்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் கரூரில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்கள் செந்தில் பாலாஜியிடம் ஜோதிமணி விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர். அதுபற்றி பேசவிரும்பவில்லை எனத் தெரிவித்த செந்தில் பாலாஜி, தேர்தல் பணிகள் நடைபெற்று வரும் இந்த நிலையில், ஒருவருக்கு ஒருவர் மாறுபட்ட கருத்துக்களை கூறி, அது சமூக வலைத்தளங்களில் தேவையற்ற கருத்துக்களை உருவாக்குவதை நான் விரும்பவில்லை எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.

மத்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம்தான் ஆர்எஸ்எஸ் – திருமுருகன் காந்தி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டுவரும் சட்டங்களையும், திட்டங்களையும் தடுக்க ஆளுநருக்கு எந்த உரிமையும்…