பெகாசஸ் உளவு விவகாரம் விசாரிக்க குழு

இஸ்ரேல் என்.எஸ்.ஓ நிறுவனத்தின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் உலகின் 10 நாடுகளை சேர்ந்த 50,000 மேற்பட்ட நபர்களின் செல்போன் தகவல்கள் திருடப்பட்டிருப்பதாக சில மாதங்களுக்கு முன்பு செய்தி ஒன்று வெளியானது. இது அரசியல் தலைவர்களிடமும், மக்களிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் இந்தியாவில் சேர்ந்த 2 ஒன்றிய அரசு அமைச்சர்கள், 2 எதிர்க்கட்சி தலைவர்கள் , 40 செய்தியாளர்கள் , வழக்கறிஞர்கள், நீதிபதிகள், தொழிலதிபர்கள், அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் என 300க்கும் மேற்பட்டவர்களின் தகவல்கள் திருடப்பட்டிருக்கிறது.
பெகாசஸ் விவகாரம் தொடர்பாக தி எடிட்டர்ஸ் கில்ட் ஒப்பி இந்தியாவின் மூத்த பத்திரிகையாளர் என்.ராம், சசி குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. ஜான் பிரிட்டாஸ், வழக்கறிஞர் சர்மா உள்ளிட்டோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
அதில்,இஸ்ரேலின் என்.எஸ்.ஓ நிறுவனம் பெகாசஸ் மென்பொருளை அரசு நிர்வாகங்களுக்கு மட்டுமே விற்பனை செய்யும். எனவே ஒன்றிய அரசு இதனை சரியாக விசாரிக்க வாய்ப்பில்லை. அதனால் சுதந்திரமாக விசாரிக்க குழு அமைக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக ஒன்றிய அரசு சார்பில் 2 பக்கங்கள் கொண்ட பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அவர்கள் அளித்த மனு போதுமானதாக இல்லாததால் மீண்டும் ஒரு விரிவான மனுவை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.ஆனால் தேச பாதுகாப்பு காரணமாக விரிவான பதில் மனு தாக்கல் செய்ய விரும்பவில்லை இன்று மத்திய அரசு அண்மையில் தெரிவித்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதி தெரிவித்திருப்பதாவது பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக தொழில்நுட்ப வல்லுநர்கள் குழுவை நியமித்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது . ஆனால் சில வல்லுநர்கள் குழுவில் இணைய விரும்பாததால் காலதாமதம் ஏற்பட்டு கொண்டிருக்கிறது. வல்லுநர் குழு தொடர்பாக அடுத்த வாரம் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்தார்.