நீட் தேர்வு எழுதாத தமிழ்நாடு மருத்துவர்கள் புதிய சாதனை

கொரோனா பெரும் தொற்றை கட்டுப்படுத்தும் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக நேற்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட அதிகமான மக்கள் ஆர்வமாக தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
இந்நிலையில் தடுப்பூசி முகாமில் நிர்ணயிக்கப்பட்ட 20 லட்ச டோஸ்கள் இலக்கை கடந்து நேற்று இரவு 10 மணி அளவில் 28 லட்சத்துக்கு அதிகமான டோஸ்கள் பயனாளிகளுக்கு ஈட்டு தமிழ்நாடு சுகாதாரத்துறை புதிய சாதனையை படைத்துள்ளது.
இந்த சாதனையை பாராட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் “கோவிட்-19ஐ தடுத்து வெல்லும் ஆயுதமாம் தடுப்பூசி போடுவதை மாபெரும் பேரியக்கமாக நடத்தி வருகிறது தமிழ்நாடு அரசு. இன்று 25 இலட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பது இந்தியச் சாதனை! இதுவரை 4 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பது இமாலய சாதனை!மாரத்தான் வேகத்தில் செயல்படும் அமைச்சர் மா.சுப்ரமணியன் அவர்களுக்கும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கும் மருத்துவர்கள் செவிலியர்க்கும் எனது நன்றி!தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் செலுத்திக் கொள்ளுங்கள்! நம்மையும் காப்போம்; நாட்டையும் காப்போம்!” என வாழ்த்தியுள்ளார்.