9 ஆம் வகுப்பு மாணவனின் அசத்தல் கண்டுபிடிப்பு… பாராட்டிய முதல்வர்

திருவாரூர் மாவட்டம் பழவனக்குடி கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் எஸ்.எஸ்.மாதவ். 9 ஆம் வகுப்பு படித்து வரும் இவருக்கு கணினி மொழிகளில் ஆர்வம் அதிகம். அதனால், அந்த மொழிகளை விரும்பிப் படித்துள்ளான்.

இவர் இரண்டு ஆண்டுகளாக கடுமையாக முயற்சி செய்து கொரோனா ஊரடங்கு காலத்தில்  கையடக்க சிறிய சிபியு( Mini CPU) கண்டுபிடித்துள்ளான். இதையறிந்த முதலமைச்சர் ஸ்டாலின் மாணவனை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார்.

மேலும், இந்தச்சிறுவன் இக்கருவி அனைவரிடத்திலும் சென்றடைய ஏதுவாக Terabyte India CPU Manufacturing Company என்ற நிறுவனத்தினைத் தொடங்கி, இணையதளம் (Online) மூலமாக மிகவும் குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகிறார்.

இவையனைத்தியும் பாராட்டிய முதலமைச்சர் கணினி தொடர்பான அவரது உயர்படிப்பிற்கும், ஆராய்ச்சிக்கும் தமிழக அரசு அனைத்துவிதமான உதவிகளையும் செய்யும் என்று உறுதியளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பட்டாசு குடோன் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 3 லட்சம் நிவாரணம்… முதல்வர் அறிவிப்பு

சேலம் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த மற்றும் காயம் அடைந்தவர்களின்…

பள்ளிக் கல்வித் துறையில் கலைஞர் நூற்றாண்டு கொண்டாடுவோம்… அமைச்சர் அன்பில்..!

தமிழ்நாடு முதலமைச்சரின் உலகத்  தரத்திலான பல்வேறு திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில்  நடப்பாண்டு…