நாடாளுமன்றத்திற்கு சைக்கிளில் சென்ற எம்பிக்கள் காரணம்?

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. பெட்ரோல் விலை ஏற்றத்தைக் கண்டு கொள்ளாத மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்கட்சிகள் கடுமையான கண்டணங்களைத் தெரிவித்து வந்தது.
இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத்திற்கு திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் சைக்கிளில் சென்றுள்ளனர். இது குறித்து அவர்கள் ”பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் சைக்கிளில் செல்கிறோம்” எனத் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, நாடாளுமன்ற கூட்டத் தொடர் சுமூகமாக நடைபெறுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.