கடிதம் கிடைக்கும் போது உயிருடன் இருப்பேனா? டாக்டரின் உருக்கமான கடிதம்

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு ஜூலை 7 ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனால், அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் தென்னாப்பிரிக்காவில் போராட்டம் வெடித்துள்ளதால் தென்னாப்பிரிக்காவே கலவர பூமியாக மாறியுள்ளது. மேலும், ஜேக்கப் பதவியில் இருந்த போது, அங்குள்ள இந்தியர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு நாட்டைத் தாரை வார்த்துக் கொடுத்ததாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், தற்போது இந்தியர்களின் மேல் போராட்டக்கார்களின் கோபம் திரும்பியுள்ளது. அங்குள்ள இந்தியர்களின் கடைகள், வணிக வளாகங்கள் தொடர்ந்து சூறையாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், டர்பனில் உள்ள ஒரு இந்திய வம்சாவளி மருத்துவர் ஒருவர் ஊடகத்திற்கு எழுதியுள்ள கடிதம் படிப்பவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைப்பதாக உள்ளது. அந்தக் கடிதத்தில் அந்த மருத்துவர், “நான் தென்னாப்பிரிக்காவின் டர்பனில் (Durban) பணிபுரியும் ஒரு மருத்துவர். உள்நாட்டு கலவரம் மற்றும் போரில் இந்திய சமூகம் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது.
ஆயுதங்கள் குவிந்துள்ளன. அனைத்து உணவு பொருட்களுக்கான கடைகள் மால்கள் எரிக்கப்பட்டுள்ளன. எரிபொருள் நிலையங்கள் இயங்கவில்லை. தகவல்தொடர்பு நெட்வொர்க் கோபுரங்கள் மீது தாக்குதல் நடந்து வருதால, தகவல் தொடர்பும் மெதுமெதுவாக பாதிக்கப்பட்டு வருகிறது., இதனால் நாங்கள் தகவல் கூட பரிமாற முடியாத நிலையில் உள்ளோம்.
நானும் மற்ற மருத்துவர்களும் மருத்துவமனைக்கு சென்று பணியாற்ற முடியவில்லை. கொரோனா தொற்றுநோயால் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. எங்களுக்கு உதவி தேவை. தென்னாப்பிரிக்காவின் டர்பன் குவா ஜூலு நடாலில் (Durban Kwa Zulu natal, South Africa) இனப்படுகொலை திட்டமிடப்பட்டுள்ளது. விமான சேவை எதுவும் இல்லாமல் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கிறோம். தயவுசெய்து எங்களுக்கு உதவுங்கள். எங்கள் நெட்வொர்க் மற்றும் தவல் தொடர்பு முழுமையாக துண்டிக்கப்படும் முன் எங்களை காப்பாற்றுங்கள். நான் என் நாட்டை நேசிக்கிறேன், ஆனால் கெட்டவர்கள் எங்களை மீது தாக்குதல் நடத்த நல்லவர்களைப் பயன்படுத்துகிறார்கள். தயவுசெய்து உதவுங்கள்” என கண்ணீர் மல்க உதவி கோரியுள்ளார்.
இந்தக் கடிதம் கிடைக்கும் போது உயிருடன் இருப்பேனா இல்லையா என தென்னாப்பிரிக்காவில் உள்ள இந்திய மருத்துவர் தங்களது உயிரைக் காப்பாற்ற கடிதத்தில் உதவி கேட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.