மகளின் தோழிக்கே பாலியல் தொல்லை… அதிமுக பிரமுகரின் அட்டூழியம்

தஞ்சை தெற்கு அதிமுக இளைஞர்கள், இளம்பெண்கள் பாசறை தலைவராக உள்ளவர் வேல் முருகன். இவரின் மகள் பத்தாம் வகுப்பு படிக்கும் நிலையில், தன் மகள் பள்ளியில் படிக்கும் ஒரு பெண்ணுக்கு பாலியல் ரீதியாகத் தொந்தரவு கொடுத்துள்ளார்.
வேல்முருகன் அந்த மாணவிக்கு தனது மகள் செல்போனில் இருந்து தனது மகளைப் போலவே வாட்ச் அப்பில் மெசேஸ் அனுப்பியும் வீட்டிற்குச் சென்றும் தொல்லை கொடுத்துள்ளார்.
மேலும், ஒரு வாரத்திற்கு முன்பு மாணவியின் வீட்டிற்கு அருகிலேயே வீடு வாடகைக்கு எடுத்து தங்கி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால், அந்த மாணவி வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் வேல்முருகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.