தாலிபான்களால் பலியான இந்திய புகைப்படக் கலைஞர்!

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப்படைகள் வெளியேறி வருகிறது. இதனால், ஆப்கானிஸ்தானின் ராணுவத்துக்கும் தலிபான்களுக்கும் இடையே தாக்குதல் நடைபெற்று வருகிறது.
ஆப்கானிஸ்தான் நாட்டின் எல்லையோரப் பகுதிகளை தலிபான் தீவிரவாதிகள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்தச் சண்டைகளைப் படம்பிடிக்க இந்திய புகைப்படக் கலைஞர் டேனிஸ் சித்திக்கி சென்றுள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு தாலிபான்கள் தாக்குதலில் இருந்து தான் நூலிழையில் உயிர் தப்பியதை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், நேற்று இரவு கந்தகர் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் சென்று தலிபான்கள் தாக்குதலை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது தலிபான்களின் தாக்குதலில் பலியானார்.
டேனிஷ் சித்திக்கி பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான புலிட்சர் விருதை வென்றுள்ள டேனிஸ் சித்திக்கி, கொரோனா பரவலின் போது டெல்லியின் சடலங்கள் எரிக்கப்படுவதை எடுத்த புகைப்படங்கள் உலகளவில் வைரலானது.