யார் இந்த சாலை டாக்டர் தம்பதி?

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்தவர்கள் கங்காதர் திலக் கட்னம். இவரும் இவரது அவரது மனைவி வெங்கடேஷ்வரியும் சேர்ந்து இதுவரை ஹைதராபாத் நகரில் உள்ள 2000 க்கும் அதிகமான குண்டுகுழியுமான சாலைகளை தங்கள் செலவில் சரி செய்துள்ளனர்.

இது குறித்து இந்த தம்பதிகள், “ சாலைகளில் விபத்துகள் அதிகமாக நடப்பதற்கு காரணமாக இருப்பது குண்டு குழியான சாலைகள் தான். அதனால், அதைத் தான் முதலில் சரிசெய்ய வேண்டும் என நாங்கள் முடிவு செய்தோம்.

ஆரம்பத்தில் இது குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கும் போது அவர்கள் கண்டுகொள்ளவில்லை. அதனால், யாரையும் எதிர்பார்க்காமல் சொந்த செலவியேயே சாலையைச் சீரமைக்க முடிவு செய்தோம்.

அதற்காக எங்கள் ஓய்வூதியப் பணத்தை செலவிடுகிறோம். கடந்த 11 ஆண்டுகளாக 40 லட்சம் வரை இதற்காக செலவிட்டுள்ளோம்” எனப் பெருமையாகக் கூறுகின்றனர்.

ஆரம்பத்தில் கண்டு கொள்ளாத அரசு அதிகாரிகள் தற்போது சாலைகளை சீரமைப்பதற்குத் தேவையான பொருட்களைத் கொடுத்து உதவுகிறார்களாம். மேலும், சில தொண்டு நிறுவனங்களும் உதவி செய்வதால் சாலையை சீரமைக்கும் பணியை இந்த தம்பதியினர் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *