இப்படி ஏறிக்கொண்டே போனால் நாங்கள் என்ன தான் செய்வது… புலம்பும் மக்கள்

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினமும் மாற்றியமைத்துக் கொள்ள பொதுத்துறை நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்திருந்தது.
இதனால், விலை குறையும் வாய்ப்பு அதிகம் எனக் கூறப்பட்ட நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த பொழுது கூட பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையவில்லை. மாறாக கூடிக் கொண்டே தான் செல்கிறது.
இதனையடுத்து, தமிழகத்தின் பல மாவட்டங்களில் பெட்ரோல் விலை சதமடித்து கூடிக்கொண்டே சென்று கொண்டிருக்கிறது. அண்மையில், வரலாற்றில் இல்லாத அளவிற்கு முதன் முறையாக சென்னையில் பெட்ரோல் விலை நூறு ரூபாயைத் தாண்டியது.
அதன்பின்பும் விலை கூடிக்கொண்டே தான் செல்கிறது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 102.23 ரூபாய்க்கும் ஒரு லிட்டர் டீசல் விலை 94.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றான பெட்ரோல் விலை தினமும் ஏறிக் கொண்டே செல்வதால் சாமானிய மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.