ஒலிம்பிக் வீரர்களுக்கான ஏர்.ஆர். ரஹ்மானின் பாடல் வெளியீடு

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் வரும் தேதி தொடங்கவுள்ளது. இதில் பங்கேற்கவுள்ள இந்திய அணி வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காக #Cheer4India என்ற பிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், அவர்களை உற்சாகப்படுத்துவதற்காக ஏ.ஆர்.ரஹ்மான இசையமைத்துள்ள பாடல் தற்போது வெளியாகியுள்ளது. ’இந்துஸ்தானி வழி’ என்று தலைப்பிடப்பட்ட இந்த பாடலுக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க இளம் பாடகி அனன்யா பிர்லா பாடியுள்ளார்.
இந்தப்பாடலை த்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சர் அனுராக் தாக்கூர் காணொலி வாயிலாக வெளியிட்டுள்ளார்.
மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு இணை அமைச்சர் திரு நிசித் பிரமானிக், இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் திரு நரீந்தர் பத்ரா, இந்திய ஒலிம்பிக் சங்க தலைமை செயலாளர் திரு ராஜீவ் மேத்தா, இந்திய விளையாட்டு ஆணையத்தின் தலைமை இயக்குநர் திரு சந்தீப் பிரதான் மற்றும் டார்கெட் ஒலிம்பிக் போடியம் திட்டத்தின் தலைமை செயல் அதிகாரி கமாண்டர் ராஜகோபாலன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.