கேட்கும்போதே தலை சுத்துதே… கொங்கு நாடு குறித்து வடிவேலு சரவெடி பேச்சு

கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்காக கொரோனா பொது நிவாரண நிதியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
இதனையடுத்து, பொதுமக்கள், அரசியல் பிரபலங்கள் எனப் பலர் நிதியளித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று வைகைப் புயல் வடிவேலு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து கொரோனா நிவாரண நிதியாக 5 லட்சம் ரூபாயை அளித்தார்.
அதன்பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழ்நாட்டில் பொற்கால ஆட்சியை முதலமைச்சர் நடத்தி வருகிறார். மரியாதை நிமித்தமாக அவரைச் சந்தித்தேன். குடும்பத்தில் ஒருவர் போல் பேசினார்.நான் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் போட்டுக் கொண்டுள்ளேன். இன்னும் 40 ஊசி போட்டுக் கொள்ளச் சொன்னாலும் போட்டுக் கொள்வேன். அதனால் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்” எனத் தெரிவித்தார்.
பின்னர் அவரிடம் தனி கொங்கு நாடு குறித்து கேள்வி கேட்கையில், நான் அரசியல் பேசல, நன்றாக இருக்கும் தமிழ்நாட்டை ஏன் பிரிக்கிறீர்கள்; கேட்கும் போதே தலை சுற்றுகிறதே என வேடிக்கையாகப் பதிலளித்துள்ளார்.