ஒரு குழந்தை திட்டம் உத்திரபிரதேசத்தில் சர்ச்சை… இந்துக்களுக்கு பாதிப்பா?

தற்போது அதிகரித்து வரும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த உத்தர பிரதேச அரசு புதிய கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்காக தனி மசோதாவையும் தாக்கல் வரையறுத்துள்ளார் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்.
அதன் படி, இனி உத்தரபிரதேசத்தில் இரண்டு குழந்தைகளுக்கும் மேல் பெற்றுக் கொண்டால் அவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடியாது. மேலும், அரசுப் பணியும் கிடைக்காது. இரு குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் ஒரு குழந்தை மட்டும் பெற்றுக் கொள்பவர்களுக்குப் பல சலுகைகளையும் அரசு அறிவித்துள்ளது.
இதற்கு, விஸ்வ இந்து பரிஷித்தின் தலைவர் அலோக் குமார் முதலமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “ இந்தக் கொள்கைகளால் ஒரு குழந்தைகளை மட்டும் பெற்றுக் கொள்ளும் பெற்றோர்கள் எதிர்பாராத விதமாக அந்தக் குழந்தை இறந்து விட்டால் அதிகம் பாதிக்கப்படுவர்.
மக்கள் தொகையைக் கட்டுபப்டுத்த இரு குழந்தை திட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனால் ஒரு குழந்தை கொள்கையை ஏற்றுக் கொள்ள முடியாது.
இப்படியே சென்றால் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்து விடும். கேரளாவிலும், அசாமிலும் முஸ்லீம்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைப் போல் உத்தரபிரதேசத்தில் நடக்காமல் இருக்க அரசு இந்த கொள்கையைக் கைவிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.