ஒலிம்பிக் வீரர்களுடன் கலந்துரையாடும் மோடி

ஐப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது. கொரோனா பரவல் காரணமாக தகுந்த பாதுகாப்பு நடைமுறைகளுடன் போட்டிகளை நடந்த உள்ளதாக ஒலிம்பிக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்தப் போட்டிகளில் விளையாட இந்திய அணி சார்பாக 126 வீரர் வீராங்கனைகள் டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கெடுக்க உள்ளனர். போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்திய அணி வரும் 17 ஆம் தேதி இந்தியாவில் இருந்து புறப்படுகிறது.
இந்நிலையில், இந்த வீரர்களுடன் இன்று(13.7.12021) மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி உரையாட உள்ளார். காணொலி வாயிலாக நடைபெறும் இந்த கலந்துரையாடலில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், இணையமைச்சர் நிசித் ப்ராமனிக், சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.