அமெரிக்காவில் இருந்தாலும் இந்தியன் தான்… சுந்தர் பிச்சை நெகிழ்ச்சி

தமிழ்நாட்டின் சென்னையில் பிறந்து வளர்ந்த சுந்தர் பிச்சை தனது உழைப்பினால் கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓவாக உயர்ந்துள்ளார். 49 வயதுடைய இவர் அமெரிக்காவில் வசிக்கிறார்.
தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், நான் அமெரிக்க குடிமகனாக இருந்தாலும் இந்தியன் என்ற உணர்வு என்னுள் ஆழமாகப் பதிந்துள்ளது எனக் கூறியுள்ளது இந்தியர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், அவர் சமூக வலைதள் உரிமை மீது பல நாடுகளில் தாக்குதல் நடைபெற்று வருகிறது. சமூக வலைதள சுதந்திரத்திற்குப் பல நாடுகளில் அச்சுறுத்தல் உள்ளது என்றும் கூறினார்.
கூகுள் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக புகார் எழுந்த நிலையில், கடந்த பத்தாண்டுகளாக உலகில் உள்ள மற்ற நிறுவனங்களை விட கூகுள் தான் 20% அதிக வரியைச் செலுத்தியுள்ளது என அந்தப் புகாரை மறுத்துள்ளார்.
மனிதர்களின் கண்டுபிடிப்புகளில் நெருப்பு, மின்சாரம் மற்றும் சமூக வலைதளம் எவ்வளவு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதோ அதே போன்று இனி வரும் காலங்களில் செயற்கை நுண்ணறிவும் அதிக கவனம் பெறும் என சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.