வலிமை அப்டேட்டும் வானதி சீனிவாசனும்

நடிகர் அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் அப்டேட் வேண்டும் என ரசிகர்கள் தொடர்ந்து பொது வெளிகளில் கேட்டு வந்தனர்.
அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என அவர்கள் கேட்காத ஆள் இல்லை என்னும் அளவிற்கு இருந்தது. இதனால், நடிகர் அஜித்தும் தம் ரசிகர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட பாஜகவின் வானதி சீனிவானிடமும் அஜித் ரசிகர் ஒருவர் வலிமை அப்டேட் கேட்டிருந்தார். அவரும், ”நான் வெற்றி பெற்றதும் வலிமை அப்டேட் நிச்சயம் வரும் தம்பி” என்று பதிலளித்திருந்தார்.
இந்நிலையில், ஒரு வழியாக நேற்று(12.7.2021) மாலை வலிமை படத்தின் ஃபஸ்ர்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. வலிமை படத்தின் இந்த அப்டேட் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிகில் உள்ளது.
இதனையடுத்து, தான் போட்டியிட்ட தொகுதியில் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றுள்ள நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில், “நான் வெற்றி பெற்றதும் வலிமை அப்டேட் வந்து விட்டது” என வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் பதிவிட்டுள்ளார்.