மீண்டும் ஊரடங்கு… கொரோனாவுடன் சேர்ந்து ஜிகா வைரஸ் பரவுவதால் அச்சம்

இந்தியாவில், கடந்த சில மாதங்களாக அதிகரித்து வந்த கொரோனா வைரஸ் தொற்று சில வாரங்களாகத் தொடர்ந்து குறைந்து வருகிறது. மேலும், பல மாநிலங்களிலும் தொற்று பாதிப்புகள் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.

கேரளாவிலும், மகாராஷ்டிராவிலும் தொற்று பாதிப்பு அதிகமாக இருந்தாலும் குறையத் தொடங்கியது. ஆனால், இந்த இரு மாநிலங்களிலும் தற்போது கொரோனா தொற்றின் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இதனால், கேரளாவில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வார இறுதி நாட்களான இன்றும் நாளையும் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு பேருந்து சேவை, மதுக்கடைகள், வங்கி நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் என எதுவும் இயங்காது என்றும் ஹோட்டல்கள் பார்சல் சேவையுடன் இயங்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்று மட்டுமல்லாமல் ஜிகா வைரஸ் தொற்றும் பரவி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தமிழ்நாடு அமைதியை குழைக்கும்  சீமான் மீது போலீசில் வழக்கறிஞர் புகார் 

திருச்சி மாவட்டம், மணப்பாறை டிஎஸ்பி ராமநாதனிடம், அரசு வழக்கறிஞர் முரளிகிருஷ்ணன் அளித்துள்ள புகாரில், …

ஒன்றிய அரசின் பட்ஜெட் ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு மிகுந்த ஏமாற்றம்… சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன்

ஒன்றிய அரசின் பட்ஜெட் ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது என கரூர்…