ஒரு கோடி சப்ஸ்க்ரைபர்களை எட்டிய முதல் தமிழ் யூ டியூப் சேனல்

நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள் என்றால் நான் ஒரு யூ டியூபர் என்று சொல்லும் அளவிற்கு சமூக வலைதளங்களின் ஆதிக்கம் தற்போது உள்ளது.
புதுக்கோட்டையைச் சேர்ந்த 6 பேர் விளையாட்டாக சமையலுக்காக ஒரு யூ டியூப் சேனலை ஆரம்பித்துள்ளனர். முதல் வீடியோவிற்கே அதிக வரவேற்பு கிடைக்க தொடர்ந்து அதிக வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த ராகுல் காந்தி இவர்களுடன் சேர்ந்து சமைத்து சாப்பிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில், இவர்களின் ‘வில்லேஜ் குக்கிங்’ என்ற யூ டியூப் சேனல் ஒரு கோடி சப்ஸ்க்ரைபர்களை எட்டியுள்ளது.
இதன் மூலம், ஒரு கோடி சப்ஸ்க்ரைபர்களை எட்டியுள்ள முதல் தமிழ் யூ டியூப் சேனல் இது என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு 10 லட்சத்தை வழங்கியுள்ளனர்.