சாவின் விளிம்பிற்குச் சென்று மீண்ட குழந்தை மீண்டும் இறப்பு

தேனி தாமரைக் குளத்தில் பிளவேந்திர ராஜா, ஆரோக்கியமேரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். கர்பிணியான ஆரோக்கியமேரி பிரசவத்திற்காக நேற்று முன் தினம் (3.7.2021) இரவு 8.30 மணியளவில் அனுமதிக்கப்பட்டார்.

அதிகாலை மூன்று மணிக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில், காலை 8 மணிக்கு குழந்தை இறந்து விட்டதாக கூறிய செவிலியர்கள் பிளாஸ்டிக் கவரில் போட்டுக் கொடுத்துள்ளனர்.

இதனையடுட்து, பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் குழந்தையை அடக்கம் செய்ய முயன்ற போது, குழந்தையின் கை அசைந்துள்ளது. அதிர்ந்து போன பெற்றோர்கள் குழந்தையை ஆராய்கையில் இதயத்துடிப்பு இருந்துள்ளது.

இதனால், மீண்டும் குழந்தை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் சிகிக்சை பலனில்லாமல் இன்று(5.7.2021) குழந்தை இறந்துள்ளது.

இதுகுறித்து தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் பாலாஜி நாதன், “ குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை 700 கிராம் மட்டுமே எடை இருந்தது. முதலில் குழந்தை இறந்து விட்டதாக கூறிய செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் மீது துறை நீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *