முகத்தை ஸ்கேன் செய்தாலே கொரோனாவைக் கண்டறியும் கருவி

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வருகிறது.
அந்தவகையில், ஐக்கிய அரபு எமிரேடிசின் ஒரு அங்கமான அபுதாபியில் தொற்று பாதிப்பு குறைந்துள்ளதால் விமானப் போக்குவரத்திற்கும் வணிக வளாகங்கள் திறப்பிற்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இங்கு வரும் மக்களின் கொரோனா வைரஸ் தொற்றை பரிசோதிப்பதற்காக புதிய கருவியை இடிஇ ஆராய்ச்சி நிலையம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முகத்திற்கு நேராக இந்தக் கருவியை வைத்ததும், அது நம் முகத்தை ஸ்கேன் செய்து ஒரு நிமிடத்தில் கொரோனா இருக்கிறதால் இல்லையா என்பதி தெரிவித்து விடும்.
உடலில் உள்ள கொரோனா வைரசின் ஆர்என்ஏ . வை மின்னணு காந்த அலை களின் மூலம் இது கண்டு பிடிக்கிறது. தொற்று இருந்தால் பாசிடிவ் என்றும் இல்லையென்றால் நெகடிவ் எனவும் காண்பிக்கிறது.
2 ஆயிரத் துக்கும் மேற்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் , 93.5 சதவீத செயல்திறனை காட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.