இனி இந்த நாட்டில் கிழிந்த ஜீன்ஸ், ஸ்பைக் ஹேர் ஸ்டைலுக்கு அனுமதியில்லை

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், தன் நாட்டில் இருந்து மேற்கத்திய கலாச்சாரத்தை ஒழிப்பதற்காக பல விநோதமான அறிவிப்புகளை வெளியிடுவதில் புகழ்பெற்றவர்.
அந்த வகையில், மேற்கத்திய கலாச்சாரமான முதலாளித்துவ கலாச்சாரம் அதிகரித்து வரும் நிலையில், அதைத் தடுப்பதற்காக புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, வடகொரியாவில் இனி டைட்டான் ஜீன்ஸ், கிழிந்த மாடல் ஜீன்ஸ், டி-ஷர்ட்டுகள் கலர்கலராக ஹேர் டை பூசிய ஸ்பைக் மற்றும் மல்லட் போன்ற ஹேர் ஸ்டைல்கள் சட்டவிரோதமாக்கப்பட்டுள்ளது.
மேலும் மூக்கு மற்றும் உதடுகளில் வளையங்கள் குத்துதல் ஆகியவற்றிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளன.
இந்த புதிய சட்டங்களின் படி, வடகொரிய ஆண்களும் பெண்களும் இதற்கு முன்னதாக அங்கீகரிக்கப்பட்ட 215 ஹேர் ஸ்டைல்களில் ஒன்றை மட்டுமே இனி வைக்க வேண்டும் என்று அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.