துளிர்விடும் நம்பிக்கை! கொரோனாவிற்கு மேலும் இரண்டு மருந்துகள் கண்டுபிடிப்பு

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாகப் போடப்பட்டு வருகிறது. அதே சமயத்தில், விஞ்ஞானிகள் தற்போது இருப்பதை விட, வைரஸ்க்கு எதிராக அதிக பாதுகாப்புத் தரும் தடுப்பூசிகளைத் தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், ஆஸ்திரேலியாவில் உள்ள கியு.ஐ.எம்.ஆர்.பெர்கோபர் மருத்துவ ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள், ‘பெட்டைட்’ என்ற அமினோ அமிலங்களின் கலவையை அடிப்படையாக கொண்ட 2 புதிய கொரோனா தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த மருந்துகள் முதற்கட்டமாக பிரான்ஸ் நாட்டில் உள்ள எலிகளுக்கு சோதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த மருந்தின் ஆரம்பகால சோதனை முடிவுகள் நம்பிக்கை அளிப்பதாகவும் லேசான பக்க விளைவுகளை மட்டுமே கொண்டுள்ளதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இதன் முதல் மருந்து கொரோனா தொற்றைத் தடுப்பதாகவும், இரண்டாம் மருந்து ஏற்கனவே பாதிக்கப்பட்ட செல்களில் இருந்து வைரஸ் தொற்றை நீக்கி பரவலைத் தடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தமிழ்நாடு அமைதியை குழைக்கும்  சீமான் மீது போலீசில் வழக்கறிஞர் புகார் 

திருச்சி மாவட்டம், மணப்பாறை டிஎஸ்பி ராமநாதனிடம், அரசு வழக்கறிஞர் முரளிகிருஷ்ணன் அளித்துள்ள புகாரில், …

ஒன்றிய அரசின் பட்ஜெட் ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு மிகுந்த ஏமாற்றம்… சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன்

ஒன்றிய அரசின் பட்ஜெட் ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது என கரூர்…