வயல்களையே கொழுத்தினாலும் குறையாத எலித்தொல்லை! கவலையில் ஆஸ்திரேலிய விவசாயிகள்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அதனுடன் சேர்ந்து ஆஸ்திரேலியா விவசாயிகள் தற்போது எலித்தொல்லையையும் சந்தித்து வருகின்றனர்.
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணம் உள்ளிட்ட உட்புற வேளாண் மண்டலங்களில் கானிபல் சுண்டெலிகள் எனப்படும் குட்டி வகை எலிகள் பல லட்ச கணக்கில் பெருகியுள்ளதோடு வேளாண் நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள உணவு பொருட்களையும் அழித்து வருகின்றன.
இந்த எலிகளை ஒழிப்பதற்காக விவசாயிகள் பலர் வயலையே கொழுத்து விடும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆனாலும் எலி தொல்லை குறைவதாக இல்லை. வேளாண்மைக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள இந்த எலிகளை ஒலிக்க ஆஸ்திரேலிய அரசும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது