கேரள சட்டசபையில் ஒலித்த தமிழ்!

கேரளாவில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சி தொடந்து இரண்டாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது.
இதைத் தொடரந்து, எம்.எல்.ஏக்கள் அனைவரும் இன்று சட்டசபையில் பதவியேற்றுக் கொண்டனர். அவர்களில், இடுக்கி மாவட்டம் தேவிகுளம் சட்டமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வழக்கறிஞர் A.ராஜா என்பவர், தன் தாய் மொழி தமிழில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
’A.ராஜா ஆகிய நான்’ என அவர் தமிழில் பதவியேற்றுக் கொண்டது தமிழர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.