கோழி மூளை தான் காரணம்! ஆஸ்திரேலியாவில் அதிசயம்

ஆஸ்திரேலியாவின் அதிக வயதுள்ள முதியவர் என்ற பெருமையை  டெக்ஸ்டர் பெற்றுள்ளார். தற்போது இவருக்கு 111 வயதாகிறது. இந்த தகவலை ஆசியாவிலுள்ள புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனர் மெலனி கல்வெர்ட் தெரிவித்துள்ளார்.

111 வயதாகும் டெக்ஸ்டர் தனது ஆரோக்கியத்தின் ரகசியம் பற்றி கூறியுள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. கால்நடைப் பண்ணை வைத்துள்ள இவர், கோழியின் சிறிய மூளையைத் தொடர்ந்து சமைத்து சாப்பிட்டு வருகிறார். அந்த சிறிய மூளை தான் தனக்கு இவ்வளவு காலம் ஆரோக்கியத்தை வழங்கி வருகிறது என டெக்ஸ்டர் தெரிவித்துள்ளார்.

இதே முறையைத் தான் இவரது மகனும் பின்பற்றுகிறாராம். 74 வயதாகும் கிரேஜ் கிரேடிட்சும் தந்தை முறையைப் பின்பற்றி கோழி மூளைகளை உண்டு வருவதால் ஆரோக்கியமாக வாழ்வதாக கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *