எரிமலை தீப்பிழம்பில் உருவாகும் பீட்சா… அது எப்படி முடியும்?
மத்திய அமெரிக்காவின் குவாத்தமாலா குடியரசில் பக்காயா எரிமலையின் தீப்பிழம்பில் பீட்சா தயார் செய்யப்படுகிறது. இந்த எரிமலை அவ்வப்போது தீப்பிழம்புகளை கக்கி வருகிறது. அதனால் அதிகாரிகள் மக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி எச்சரித்துள்ளனர். இந்நிலையில் அந்த மலையின் உச்சி பகுதியிலிருந்து அடிவாரத்திற்கு வழிந்து வரும் எரிமலை தீப்பிழம்புகளை சமையலறையாக மாற்றி பீட்சா தயாரித்து அசத்துகிறார் பதிவாளர் டேவிட் கார்சியா.
எரிமலையின் தீப்பிழம்பு வெப்பத்தைத் தாங்கும் அளவிற்கு ஒரு பாத்திரம் ஒன்றை செய்துள்ளார் கார்சியா.
அதனைப் பயன்படுத்தி ருசியான பீட்சா செய்து அசத்தி வருகிறார் கார்சியா.
இதனைக் கேள்விப்பட்ட அந்தப் பகுதி மக்கள் கார்சியா செய்யும் பீட்சாவை சுவைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.